/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆலமரத்துப்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
ஆலமரத்துப்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ஆலமரத்துப்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ஆலமரத்துப்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : ஜன 23, 2025 03:53 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி செல்லும் ரோட்டில் ஆறு மாதமாக குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் நீரேற்றும் நிலையத்திலிருந்து அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் முழுவதும் வீணாக ரோட்டில் ஓடுகின்றது. ஆறு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாவதால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
திருத்தங்கல் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் அனைவருக்கும் போதவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கித் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடைந்த குழாயினை சரி செய்து இப்பகுதியினருக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.