/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து
/
பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து
ADDED : அக் 26, 2025 06:23 AM

வத்திராயிருப்பு: பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றபடும் உபரி நீரால் வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய்க்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிளவக்கல் பெரியாறு கோவிலாறு அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரியாறு அணை நிரம்பி தற்போது 41 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அணைக்கு வரும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு கூமாபட்டி, வத்திராயிருப்பு பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரை வறண்டு கிடந்த பெரியகுளம் கண்மாய் தற்போது தண்ணீர் வரத்தால் கடல் போல் காட்சி அளிக்கிறது. அதே நேரம் விராக சமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
தொடர்மழையால் கூமாபட்டி, வத்திராயிருப்பு, கொடிக்குளம், நெடுங்குளம், கான்சாபுரம், சேது நாராயணபுரம், தம்பிபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் வளர்ந்து பசுமை சூழலில் காணப்படுகிறது.

