/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் குடிநீர் தொட்டி
/
இடியும் நிலையில் குடிநீர் தொட்டி
ADDED : நவ 30, 2024 05:58 AM

சிவகாசி; வெம்பக்கோட்டை ஒன்றியம் மம்சாபுரத்தில் ரோட்டோரத்தில் சேதமடைந்து உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் மம்சாபுரத்தில் ரோட்டோரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கூடிய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
தொட்டியின் துாண்கள் முதல் உச்சி வரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியில் இருந்து தண்ணீர் கசிகின்றது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகின்றது. தொட்டியின் அருகிலேயே நுாலகம் உள்ளது. தொட்டியை கடந்து தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படும் இடியும் நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.