/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாயுமானவர் திட்டத்தில் தவறுகள் நடக்காத வகையில் கண்காணிக்கிறோம்
/
தாயுமானவர் திட்டத்தில் தவறுகள் நடக்காத வகையில் கண்காணிக்கிறோம்
தாயுமானவர் திட்டத்தில் தவறுகள் நடக்காத வகையில் கண்காணிக்கிறோம்
தாயுமானவர் திட்டத்தில் தவறுகள் நடக்காத வகையில் கண்காணிக்கிறோம்
ADDED : ஆக 13, 2025 02:02 AM

அருப்புக்கோட்டை: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் எந்தவித தவறுகள் நடக்காத வகையில் கண்காணிக்கிறோம் என அருப்புக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.
அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம், மற்றும் சொக்கலிங்கபுரம் நேரு மைதானம் பகுதிகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார்.
திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: இந்தத் திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் 49 ஆயிரத்து 716 பேர் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் 2 நாட்களில் இவர்கள் வீட்டிற்கு கூட்டுறவு சார்ந்த அலுவலர்கள் ரேஷன் பொருட்களை வழங்குவார்கள். அதை நாங்கள் முறையாக கண்காணிக்கிறோம்.
எந்தவித தவறும் நடக்காத வகையில் ஆய்வு செய்கிறோம். சனி, ஞாயிறுகளில் மட்டும் இருக்கின்ற பணியாளர்களை வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
நரிக்குடி அ.முக்குளத்தில் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்து, பேசியதாவது., இத்திட்டம் முன்னோடி திட்டமாகவும், பயனாளிகளுக்கு வசதியாகவும் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்கு வடிவமைக்கப்பட்டது என்றார்.

