/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராமதாஸ் பேசுவதை பொருட்படுத்தாமல் மக்கள் பணியை மேற்கொள்கிறோம் * பா.ம.க., பொருளாளர் திலகபாமா பேட்டி

ADDED : செப் 26, 2025 02:56 AM
சிவகாசி:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசுவதை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் இணைத்துக் கொண்டுள்ளோம் என பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா கூறினார்.
பா.ம.க., தலைவர் அன்புமணி ஜூலை 25 முதல் நவ. 1 வரை 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற பெயரில் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 100 நாட்கள் மேற்கொண்டு வருகிறார்.
செப். 26 முதல் அக். 8 வரை தென் தமிழகத்தில் நடை பயணம் செய்ய உள்ள அன்புமணி, செப்.29 ல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா, தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
பின் திலகபாமா கூறியதாவது: அன்புமணியின் நடைப்பயணத்தின் போது விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வலுப்படுத்த காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்கவும் வலியுறுத்தப்படும்.
அன்புமணி தலைமையிலான நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் 2026 ஆக. 26 வரை நீடித்து ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக பேசுவதை ஏற்க முடியாது.
நிறுவனர் ராமதாஸ் பேசி வருவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது என கூறும் ஜி.கே.மணி அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும்.
தேர்தல் ஆணைய ஒப்புதல் கடிதத்திற்கு பின்பாக கட்சி நிர்வாகிகள், முன்பு குழப்பத்திலிருந்தவர்கள் கூட அன்புமணி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.