UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: 2025–26ம் ஆண்டிற்கான திறன் மிகு கைத்தறி நெசவாளர் விருது சிறந்த வடிவமைப்பு, நெசவுத் தரத்துடன் கூடிய கைத்தறி சேலை ரகத்தை உற்பத்தி செய்ததற்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஆர்.எச்.195., நம் நாடு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கணேசனுக்கு மூன்றாம் பரிசுக்கான ரூ.10 ஆயிரம் காசோலை, சான்று கைத்தறி துறை சார்பில் காந்தி ஜெயந்தியான நேற்று கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் வழங்கப்பட்டது.
அரசு செயலாளர் லில்லி, கைத்தறி இயக்குனர் உமா மகேஸ்வரி உடனிருந்தனர்.
