/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவியூரில் வெங்காய பயிரில் களையெடுக்கும் பணி மும்முரம்
/
ஆவியூரில் வெங்காய பயிரில் களையெடுக்கும் பணி மும்முரம்
ஆவியூரில் வெங்காய பயிரில் களையெடுக்கும் பணி மும்முரம்
ஆவியூரில் வெங்காய பயிரில் களையெடுக்கும் பணி மும்முரம்
ADDED : அக் 28, 2025 03:28 AM
காரியாபட்டி: ஆவியூர் பகுதியில் வெங்காய பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் பருவத்தில் களைகள் அதிகம் முளைத்துள்ளதால், அதனை அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.
காரியாபட்டி ஆவியூர், மாங்குளம், அரசகுளம், குரண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தோட்ட விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. காலத்தில், வெங்காயம், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்த முறை அதிக அளவில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். பயிரிட்டு 1 மாதத்திற்கு மேலானதால் ஓரளவிற்கு நன்கு வளர்ந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் செடிகள் செழுமையாக உள்ளன. இந்நிலையில் களைகள் அதிக அளவில் முளைத்து, பயிர்களை வளர விடாமல் மூடி வருகின்றன. காய் பிடிக்காமல் பாதிக்கக்கூடும் என்பதால், களைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மணி, விவசாயி, ஆவியூர் கூறியதாவது: களை செடிகள் வளர்ந்து வருவதால், பயிர்கள் பாதிக்கக்கூடும். களைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பின் உரமிட்டால் நன்கு காய் கட்டி விளைச்சல் நன்றாக இருக்கும். மழை நேரத்தில் அதிக களை செடிகள் வந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து அப்புறப்படுத்தினால், பயிர்கள் பாதுகாப்பாக நன்கு வளரும். நல்ல விளைச்சல் இருக்கும்.

