sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மும்பை-குமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

/

மும்பை-குமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

மும்பை-குமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

மும்பை-குமரி இடையே வாராந்திர சிறப்பு ரயில்


ADDED : ஏப் 24, 2025 03:03 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மும்பை சி.எஸ்.டி., --- கன்னியாகுமரி இடையே ஜூன் மாதம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 7 முதல் ஜூன் 25 வரை புதன் தோறும் நள்ளிரவு 12:30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (01005) (வியாழக்கிழமை )மறுநாள் மதியம் 1:15 மணிக்கு கன்னியாகுமரி வரும்.

மறுமார்க்கம் மே 8 முதல் ஜூன் 26 வரை வியாழன் தோறும் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (01006) சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு மும்பை செல்லும்.

இவ்விரு ரயில்கள், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்துார் வழியாக செல்லும். 4 ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, 1 சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகிறது.

இவற்றுக்கான முன்பதிவு துவங்கியது.






      Dinamalar
      Follow us