ADDED : ஆக 23, 2025 11:17 PM
விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணியார்டர் ஆகியவற்றை பதிவு செய்தல், பல்வேறு அஞ்சல் சேவைகளை செய்ய உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள், நிறுவனங்கள் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் விருதுநகர் கோட்டம், விருதுநகர்- 626 001 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது அருகில் உள்ள தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகங்களில் சமர்ப்பிக்கலாம். இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவங்களை அருகில் உள்ள கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை வரும் செப். 10க்கு சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.