நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் பெர்பெக்ட் சார்பில், பயிற்சி முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடந்தது. செயலாளர் விக்டர் வரவேற்றார். முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் பிரகாஷ் லயன்ஸ் கிளப் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். நடைபாதை வியாபாரிகளுக்கு குடை வழங்கப்பட்டது.
மாவட்ட உறுப்பினர் பொறுப்பு தலைவர் கிருபா ராஜ்குமார், வட்டாரத் தலைவர் குருசாமி, அருப்புக்கோட்டை லயன்ஸ் கிளப் செயலாளர் ஓம்ராஜ், உதவி தலைவர் கிருஷ்ணகுமார், கிளப் நிர்வாகிகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.