/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.5.41 லட்சத்தில் நலத்திட்ட உதவி
/
ரூ.5.41 லட்சத்தில் நலத்திட்ட உதவி
ADDED : டிச 12, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 20 பேருக்கு ரூ. 5 லட்சத்து 41 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
இது போன்று திரட்டப்படும் நிதியில் இருந்து போரில் ஊனமுற்ற படை வீரர்கள், உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. படைவீரர்கள் நலத்துறை மூலம் 2023ல் ரூ. 89. 83 லட்சம் வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக நிதி உதவிகள் வழங்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.