/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
108 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்
/
108 பயனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்
ADDED : செப் 29, 2024 06:04 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 108 பயனாளிகளுக்கு ரூ. 10. 24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் எம்.பி., மாணிக்கம் தாகூர் வழங்கினார்.
இதில் 13 பேருக்கு ரூ. 1.70 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, 26 பேருக்கு ரூ. 2 லட்சத்தில் கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, 4 பேருக்கு ரூ. 40 ஆயிரத்தில் மருத்துவ உதவிகள், 15 பேருக்கு ரூ. 3 லட்சத்தில் ஆடு வளர்ப்பு, ஒருவருக்கு ரூ. 10 ஆயிரம் திருமண நிதியுதவி, 2 பேருக்கு ரூ. 15 ஆயிரத்தில் சிறுதொழில் புரியவும், 7 பேருக்கு ரூ. 35 ஆயிரத்தில் விதவை உதவித்தொகை, 30 பேருக்கு ரூ. 2.54 லட்சத்தில் மோட்டார் தையல் மிஷின் வழங்கப்பட்டது.