நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:  சாத்துார் நகர வட்டார காங்., சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக சாத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவர் சிலைக்கு ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் வடக்கு ரத வீதியில் ஏழை மக்களுக்கு அரிசி, சேலை, வேஷ்டி, உள்ளிட்ட இலவச பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ், நகர தலைவர் அய்யப்பன், துணைத்தலைவர்கள் சேதுராமலிங்கம், வெள்ளைச்சாமி, சின்னப்பன், சுந்தர்ராஜன், லட்சுமணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

