ADDED : அக் 17, 2026 07:36 PM
காரியாபட்டி: காரியாபட்டி பி. புதுப்பட்டியில் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில் 204 பயனாளிகளுக்கு ரூ.18.66 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், நத்தம் பட்டாக்கள், மின்னணு குடும்ப அட்டைகள், தையல் இயந்திரம், விவசாய இடுபொருட்கள், பவர் டிரில்லர்கள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
அரசு அலுவலர்கள், மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
