/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுற்றுச்சூழலை காக்க சைக்கிள் பயணம் 193 நாடுகளை சுற்ற தயாராகும் மேற்கு வங்க இளைஞர்
/
சுற்றுச்சூழலை காக்க சைக்கிள் பயணம் 193 நாடுகளை சுற்ற தயாராகும் மேற்கு வங்க இளைஞர்
சுற்றுச்சூழலை காக்க சைக்கிள் பயணம் 193 நாடுகளை சுற்ற தயாராகும் மேற்கு வங்க இளைஞர்
சுற்றுச்சூழலை காக்க சைக்கிள் பயணம் 193 நாடுகளை சுற்ற தயாராகும் மேற்கு வங்க இளைஞர்
ADDED : ஜூலை 15, 2025 03:15 AM

விருதுநகர்: சுற்றுச்சூழலை காக்க மேற்கு வங்கத்தில் இருந்து சைக்கிள் பயணம் துவங்கி, ஸ்ரீலங்கா சென்று வந்துள்ள இளைஞர் நேற்று விருதுநகர் வந்தார்.193 நாடுகளை சுற்ற தயாராகி வரும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேற்கு வங்காளம் லால்கோலா முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் பிரசன்ஜித் தாஸ் எனும் ஜோஜோ டாடா 26. இவர் சைக்கிளில் பயணிப்பவர். உலக சுற்றுப்பயணமாக 195 நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சைக்களில் 2025 ஜன. 4ல் பயணத்தை துவங்கினார். மேற்கு வங்கத்தில் துவங்கி ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, புதுச்சேரி, நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து இலங்கைக்கு கப்பலில் சென்றார்.
இலங்கையில் இருந்து திரும்பி தற்போது கன்னியாகுமரி நோக்கி செல்கிறார். நேற்று இவர் விருதுநகர் வந்தடைந்தார். இதுவரை 191 நாட்களில் 9100 கி.மீ., வரை பயணம் செய்துள்ளார். பசுமையை காக்க சைக்கிள் ஓட்டுவீர், அமைதியான சூழலுக்கு மரங்கள் தேவை, ரத்த தானம் செய்வீர், ஆரோக்கியத்திற்கு சைக்கிளில் செல்லுங்கள் ஆகிய பதாகைகளை ஏந்தி செல்கிறார். கன்னியாகுமரி சென்று அங்கிருந்து நேபாளுக்கு பயணிக்க உள்ளார். 193 நாடுகளை சுற்ற தயாராகி வருகிறார்.
அவர் கூறியதாவது: சுற்றுச்சூழலை காக்க சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து உலக சுற்றுப்பயணம் செல்கிறேன். பள்ளி, கல்லுாரிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். உள்ளூர் என்.ஜி.ஓ.,க்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். இன்னும் 193 நாடுகளுக்கு செல்ல வேண்டும், என்றார்.
இவர் ஏற்கனவே 2021ல் காற்று மாசை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.