/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர் மீது நடவடிக்கை என்ன
/
தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர் மீது நடவடிக்கை என்ன
தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர் மீது நடவடிக்கை என்ன
தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர் மீது நடவடிக்கை என்ன
ADDED : மே 17, 2025 12:47 AM
விருதுநகர்:தொடர்ந்து 3 கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர் மீது என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள் என நகராட்சி கூட்டத்தில் தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் நகராட்சியில் சாதாரண, அவசரக் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் மாதவன் தலைமை வகித்தார். கமிஷனர் சுகந்தி, பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
மதியழகன், தி.மு.க.,: மண் ரோடுகளை தார் ரோடுகளாக மாற்ற ரூ.7 கோடிக்கு வைக்கப்பட்ட தீர்மானத்தில், தனது வார்டு பகுதி விடுபட்டுள்ளது.
இதை கலையரசன் (தி.மு.க.,), முத்துலட்சுமி (சுயேச்சை) ஆமோதித்தனர்.
பால்பாண்டி (காங்.): பாதாள சாக்கடை வாகனங்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. புதிய வாகனங்கள் எப்போது வாங்கப்படும்.
எட்வின் பிரைட் ஜோஸ், பொறியாளர்: புதிய வாகனங்கள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்): மூன்று கூட்டங்களுக்கு தொடர்ந்து வராத நகராட்சி கவுன்சிலர்களை கமிஷனர் காப்பாற்றுவதாக 'தினமலர் நாளிதழில்' செய்தி வெளியாகியுள்ளது. இங்கு 3 கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஏன் மன்றத்தில் அனுமதித்தீர்கள்.
கடந்த கூட்டத்திற்கு வந்தது போல ஏன் வருகைப் பதிவேட்டில் திருத்தி கையொப்பம் வாங்கியுள்ளீர்கள். சட்டப்படி செயல்படுங்கள். இது நல்ல நடைமுறையல்ல.
மாதவன், நகராட்சி தலைவர்: அந்த கவுன்சிலருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, கூட்டம் முடிந்ததும் எனது அறையில் வைத்து கையொப்பமிட்டார்.
ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்): அவ்வாறு கையெழுத்து வாங்குவதும் தவறுதான். நான் எதிர்ப்பு தெரவிக்கிறேன்.
முத்துராமன்(தி.மு.க.,): ரயில்வே பீடர் ரோடு, படேல் ரோடு பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்கினால் ஆக்கிரமிப்பு அதிகமாகும்.
செல்வரத்னா (தி.மு.க.,): கழிவு நீர் வாறுகால்களை துார்வாரும் பணிகள் தற்போது நடைபெறுவது இல்லை. எனவே, 4 பிரிவு தொழிலாளர்களையும் ஒரே வார்டில் 2 நாட்கள் துார்வாரும் பணி செய்திட வேண்டும்.
ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே, இ-டென்டர் தான் விட வேண்டுமென கடந்த பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே, மார்ச் மாதம் குத்தகைக்கு விடப்பட்ட 8 தீர்மானங்களையும் ரத்து செய்ய வேண்டுமென பெரும்பாலான கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 8 தீர்மானங்களையும் தலைவர் ரத்து செய்தார்.
மேலும் 4 தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.