தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைக்கும் செயலி என்ன ஆனது

விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைக்கும் செயலி என்ன ஆனது

விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைக்கும் செயலி என்ன ஆனது


ADDED : பிப் 07, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் நோக்கத்தில் ஒரு செயலி வேளாண் துறையால் 2023 பிப். ல் உருவாக்கப்பட்டது. அது உழவன் செயலியில் ஒரு சேவையாக சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக பதிவு செய்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொழிலாளர்கள் தங்களின் மாவட்டத்தை விட்டு பிற மாவட்டம், மாநிலங்களுக்கு செல்வதை தவிர்த்து உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், திறமையான தொழிலாளர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் விவசாயிகள் விவசாய பணிகளை உரிய பருவத்தில் செய்யவும் இச்செயலி உதவுகிறது என்று கூறினர்.

இந்த செயலி விவசாயிகளையும் தொழிலாளர்களையும் இணைக்கும். ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தைகைவிடுவது குறையும் என்றனர். இந்த செயலி சேவை துவங்கப்பட்டு ஓராண்டாகியும், தற்போது வரை தீர்வு இல்லை. சொற்பமான விவசாயிகள் கூட இந்த செயலி சேவை மூலம் பயன்பெற்றனரா என தெரியவில்லை.வேளாண்துறைஇது போன்ற முன்னெடுப்புகளையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆள்பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக உள்ள வேளாண் இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் போதிய அளவில் இல்லை. இதனாலும் தீர்வு கிடைக்காமல் உள்ளன.

இந்தாண்டு 13 ஆயிரம் ஏக்கர் வரை மழை பாதிப்பை சந்தித்து விட்ட போதிலும் மானாவாரி பயிர்கள் விவசாயிகளுக்கு புத்துயிர்ப்பை அளித்துள்ளன. இருப்பினும் ஆள்பற்றாக்குறை சிக்கல் தொடர தான் செய்கிறது. ராஜபாளையம், சேத்துார், தேவதானம், ஸ்ரீவில்லிபுத்துார் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் இன்றளவும் ஆள் பற்றாக்குறை நீடிக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள செயலி சேவை குறித்து விவசாயிகளுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தான்தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இருவருக்கும் பாலமாக இந்த செயலி செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதில் உள்ள சிக்கல்களை கண்டறிய வேண்டும்.

தொழிலாளர்கள் ஊதிய பிரச்னையா அல்லது செயலியை இயக்கும் அளவு படிப்பறிவு குறைவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அந்தந்த வேளாண் உதவி அலுவலர்கள் மூலமாக தொழிலாளர்கள், விவசாயிகளை பெற நடவடிக்கை செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us