/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது எப்போது இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கேள்வி
/
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது எப்போது இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கேள்வி
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது எப்போது இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கேள்வி
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது எப்போது இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கேள்வி
ADDED : ஆக 20, 2025 02:53 AM
விருதுநகர்:''தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்,'' என, விருதுநகரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறினார்.
அவர் கூறியதாவது: அரசாணை 220ன் படி 7500 இடைநிலை ஆசிரியர்களை 2008ல் நியமிக்க பணிகள் துவங்கி 2009 ஜூன் 1ல் நியமனம் செய்தனர். இந்த இடைநிலை ஆசிரியர்களது ஆசிரியர் தேர்வு வாரிய நியமன ஆணையில் ஊதிய நிர்ணய விகிதம் ரூ.4500- 125-7000 என குறிப்பிடப்பட்டுள்ளது. பணி நியமன அழைப்பு கடிதத்தில் உள்ள ஊதியத்தை வழங்கவில்லை. அதன் பின் 2012, 2014ல் லட்சக்கணக்கானோர் எழுதிய டெட் தேர்வில் வெற்றி பெற்று 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் எங்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்படவில்லை.
ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் ஊதிய குழுவில் 36 மற்ற பிரிவினருக்கும் மூன்று நபர்கள் அடங்கிய ஊதிய குழுவில் 24 பிரிவினருக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. பல நுாற்றுக்கணக்கான பிரிவினருக்கு ஊதிய முரண்பாடுகள் சரி செய்யப்பட்டது. ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர் எனக்கூறி தவிர்த்ததுடன் அல்லாமல் ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் தொடர்ந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்கின்றனர் என்ற காரணங்களை கூறி மறுத்து விட்டனர். நாங்கள் கேட்பது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அல்ல. தமிழகத்தில் பணிபுரியக்கூடிய சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம். அதாவது ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி, ஒரே பணி என அனைத்தும் சமமாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சமவேலைக்கு சம ஊதியம் மட்டுமே.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 2023ல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய மூன்று நபர் குழுவை கொண்டு வந்தனர். இரண்டரை ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. விரைந்து கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் இறுதியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்றார்.