/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் எப்போது துவங்கும்
/
பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் எப்போது துவங்கும்
பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் எப்போது துவங்கும்
பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் எப்போது துவங்கும்
ADDED : டிச 19, 2025 05:47 AM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டத்தின் சுற்றுலா தலமாக விளங்கும் பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணி எப்போது துவங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
1980ல் உருவாக்கப்பட்ட பிளவக்கல் பெரியாறு அணையினை தற்போது பொதுப்பணித்துறை நிர்வகித்து வருகிறது. இங்கு 2001ல் சுற்றுலாத்துறை மூலம் பூங்கா வளர்ச்சி திட்ட பணிகள் நடந்தது. 20 ஆண்டுகளான நிலையில் ரோடுகள் சேதமடைந்து பூங்காவிற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா ஊரடங்கு காலமான 2020 முதல் தற்போது வரை மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
எனவே, மாவட்டத்தின் சுற்றுலா தலமாக விளங்கும் பிளவக்கல் அணை பூங்காவை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்களும் கோரிவந்தனர்.
கடந்தாண்டு நவம்பரில் விருநகரில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ரூ.10 கோடி செலவில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். அறிவித்து 8 மாதங்கள் கடந்த நிலையில் ஆக. 8ல் பூங்கா சீரமைப்பு பணிக்கு நிர்வாக அனுமதி அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழவன் கோவிலில் இருந்து அணை வரை, 3.75 மீட்டர் அகலத்தில் 4கி.மீ., தூரத்திற்கு தார் ரோடு, காம்பவுண்ட் சுவர், பென்சிங், அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், நுழைவுப் பகுதியில் ஆர்ச், பூங்கா செல்ல பாலம், மரத்தோட்டம், வாக்கிங் செல்ல பேவர் பிளாக் ரோடு, செல்பி ஸ்பாட், யோகா, ஜிம், கேண்டீன், வாட்ச் டவர், வாகன நிறுத்தம், டெலஸ்கோப் உட்பட 29 வசதிகள் செய்யப்பட உள்ளது.
தற்போது அரசாணை பிறப்பித்து நான்கு மாதங்களான நிலையில் இன்னும் பணிகள் துவங்கவில்லை. எப்போது பணிகள் துவங்கி பயன்பாட்டுக்கு வருமென சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
2026 ஜனவரியில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது அப்போது பிளவுக்கல் பெரியாறு அணை மேம்பாடு திட்ட பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எதிர்பார்க் கின்றனர்.

