/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் கங்காரு சிகிச்சையில் பராமரித்து சாதனை

ADDED : டிச 19, 2025 05:48 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான ஐ.சி.யு., கங்காரு சிகிச்சை முறையில் பராமரித்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ராணி 28. கர்ப்பிணியான இவர் பனிகுடநீர் உடைந்ததால் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, மகப்பேறு பிரிவு துறைத் தலைவர் கீதா தலைமையிலான மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து ஒரே பிரசவத்தில் எடை குறைவான 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தது. தலைமை மருத்துவர் சங்கீத் தலைமையிலான மருத்துவக் குழு குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் மூலம்நுரையீரல் வளர்ச்சிக்குரிய மருந்து ஆகிய உயர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். தற்போது 3 குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக உள்ளனர்.
கங்காரு பராமரிப்பு சிகிச்சை முறை மூலம் குழந்தைகளின் எடையை அதிகரித்தும் டிச. 18 நேற்று தாயும்,குழந்தைகளும் நலமாக திரும்பியதாக டீன் ஜெயசிங், கண்காணிப்பாளர் அவிந்த்பாபு தெரிவித்தனர்.