/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை தேக்கமாக, கழிவுநீர் ஓடுமிடமாக கவுசிகா நதி மாசற்ற நீர்நிலையாக மாறுவது எப்போது
/
குப்பை தேக்கமாக, கழிவுநீர் ஓடுமிடமாக கவுசிகா நதி மாசற்ற நீர்நிலையாக மாறுவது எப்போது
குப்பை தேக்கமாக, கழிவுநீர் ஓடுமிடமாக கவுசிகா நதி மாசற்ற நீர்நிலையாக மாறுவது எப்போது
குப்பை தேக்கமாக, கழிவுநீர் ஓடுமிடமாக கவுசிகா நதி மாசற்ற நீர்நிலையாக மாறுவது எப்போது
ADDED : ஜன 01, 2024 04:56 AM

விருதுநகர்: விருதுநகர் கவுசிகா நதியை ஒவ்வொரு ஆய்வின் போது விரைவில் துார்வாரப்படும் என அறிவிக்கும் அதிகாரிகள், அதை செயல்படுத்துவதில்லை. குப்பை தேக்கமாக, கழிவுநீர் ஓடுமிடமாக மாறியதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர், சுற்றுவட்டார மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் வரை கவுசிகா நதி தான் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளது. மதுரை மாவட்டம் மங்களரேவு பகுதியில் நீர்வரத்து ஓடை வழியாக வரும் நீர், வடமலைக்குறிச்சி கண்மாய் நிரம்பி வெளியேறும் நீர் விருதுநகர் வழியாக கவுசிகா நதியாக ஓடுகிறது. இதன் வழியாக குல்லுார் சந்தை அணையை நீர் அடைகிறது.
இந்த கவுசிகா நதி விருதுநகரில் நுழைந்து வெளியேறி செல்லும் இடம் வரை கருவேல மரங்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. இதன் கரைப்பகுதிகள் இறைச்சி, மனித கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் என அனைத்து கழிவுகளையும் கொட்டும் இடமாக மாறி உள்ளது. பாத்திமா நகர், சிவகாமிபுரம், பர்மா காலனி, அய்யனார் காலனி, ஆத்துமேடு, யானைக்குழாய், அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இருபுறங்களிலும் கரை ஓரங்களில் குப்பை அதிகளவில் காணப்படுகின்றன. சட்டசபை குழு ஆய்வு செய்த போது கூட கவுசிகா நதி விரைவில் துார்வாரப்படும் என்றனர். தற்போது வரை எந்த பணியும் நடக்கவில்லை.
முன்பு நடந்த மராமத்து பணியில் ஆழமாக தோண்டி துார்வாரவில்லை. எவ்வித தடுப்பணைகளும் கட்டப்படவில்லை. ஆகவே பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து கவுசிகா நதியை மீட்க வேண்டும். மாசற்றதாக மாற்ற வேண்டும்.