/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடைவது எப்போது தற்காலிக பஸ் ஸ்டாண்டில் தினம் தினம் விபத்துகள்
/
புது பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடைவது எப்போது தற்காலிக பஸ் ஸ்டாண்டில் தினம் தினம் விபத்துகள்
புது பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடைவது எப்போது தற்காலிக பஸ் ஸ்டாண்டில் தினம் தினம் விபத்துகள்
புது பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடைவது எப்போது தற்காலிக பஸ் ஸ்டாண்டில் தினம் தினம் விபத்துகள்
ADDED : ஜூலை 21, 2025 02:05 AM

அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் பணிகள் ஆண்டுக் கணக்கில் நடந்து வருவதாலும், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுவதாலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இது கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் நன்றாக இருந்த பஸ் ஸ்டாண்டை, இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்தனர். 2023ல், ரூ.7.92 கோடிக்கு பஸ் ஸ்டாண்ட் பணி துவங்கப்பட்டது. இதன் அருகில் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் செயல்படுத்தப்பட்டது. ஒராண்டிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
பணிகள் நீண்டு கொண்டே சென்றதால் 2024ல், அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என கூறி வந்த நிலையில், பணிகள் இழுத்துக் கொண்டே சென்றது. இதனால் கூடுதலாக மேலும் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை செய்து வருகின்றனர். கோடிகளை கொட்டியும் பணி முடிந்தபாடில்லை. இந்நிலையில் அருகில் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் பயணிகள் அவதிப்பட்டு வந்ததால், மதுரை ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகில் 3 மாதங்களுக்கு முன்பு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அங்கு மாற்றப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கும் போதுமான வசதிகள் பயணிகளுக்கு இல்லை.
பஸ்கள் வந்து செல்வதில் இடைஞ்சலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தினமும் டூவீலர்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. தினம் தினம் விபத்து, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராததால் கொந்தளிப்பிலும், அதிருப்தியிலும் உள்ளனர். நகராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவுப்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பஸ் ஸ்டாண்டிற்குரிய பணி ஒப்பந்த காலம் முடிவடைந்தும் பணி நடந்து கொண்டே தான் இருக்கிறது.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.