/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மஸ்துார் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்குவது ஏன்
/
மஸ்துார் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்குவது ஏன்
மஸ்துார் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்குவது ஏன்
மஸ்துார் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்குவது ஏன்
ADDED : பிப் 22, 2024 06:00 AM
நரிக்குடி : மஸ்தூர் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்குவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கும் என நரிக்குடி ஒன்றிய குழுக் கூட்டம் ஒன்றிய குழுக் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
நரிக்குடி ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் காளீஸ்வரி தலைமையில், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பி.டி.ஓ., ஜெயபுஷ்பம் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்
போஸ், (அ.தி.மு.க.): மஸ்தூர் பணியாளர்களுக்கு பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. கொசு மருத்து அடிப்பதே கிடையாது. பொது நிதி பணத்தை எடுக்கும் தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், துணைத் தலைவர், (அ.தி.மு.க.): டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு ஏன் பொது நிதியிலிருந்து ஏன் சம்பளம் வழங்குறீங்க. பொது நிதி வீணடிக்கப்பட்டு, வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது. வேறு அரசு நிதி பெற்று சம்பளம் வழங்குவது சம்மந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஜெயபுஷ்பம், பி.டி.ஓ.,: கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஜெயலட்சுமி, (தி.மு.க.): நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
கவிதா, (அ.தி.மு.க.): கட்டனூரில் பள்ளி கட்டடம், சுடுகாட்டு கொட்டகை, இருஞ்சிறையில் சமுதாய கூடம், பள்ளி கட்டடம் பழுதடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரளாதேவி, (அ.தி.மு.க.): நரிக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளை சரிவர கவனிப்பதில்லை. உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.