/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பால் வியாபாரி கொலைவழக்கில் மனைவி, மகள், மைத்துனர் கைது
/
பால் வியாபாரி கொலைவழக்கில் மனைவி, மகள், மைத்துனர் கைது
பால் வியாபாரி கொலைவழக்கில் மனைவி, மகள், மைத்துனர் கைது
பால் வியாபாரி கொலைவழக்கில் மனைவி, மகள், மைத்துனர் கைது
ADDED : ஏப் 17, 2025 05:29 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டியில் பால் வியாபாரி சுப்பிரமணி 60, கொலை வழக்கில் மனைவி ஈஸ்வரி, மகள் தெய்வயானி 30, மைத்துனர் செல்வக்குமாரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
ராஜபாளையம் அருகே எம்.பி.கே புதுப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த பால்வியாபாரி சுப்பிரமணி, இவருக்கு மனைவி ஈஸ்வரி, மகள்கள் ராஜலட்சுமி 32, தெய்வானை இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.
இளைய மகள் தெய்வானைக்கும் அவரது கணவர் கார்த்திக் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததால் சுப்பிரமணி இருவரையும் குழந்தைகளுடன் இந்திரா காலனியில் வீடு எடுத்து தங்க வைத்தார்.
ஒரு மாதத்திற்கு முன் கார்த்திக் பிரிந்து சென்ற நிலையில் நேற்றுமுன்தினம்சுப்பிரமணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெய்வானையும், ஈஸ்வரியும் தெரிவித்தனர்.
இறந்தவர் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் மனைவி ஈஸ்வரி, மகள் தெய்வானை, ஈஸ்வரியின் தம்பி செல்வகுமார் ஆகியோர் சேர்ந்து சுப்பிரமணியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்ததை அடுத்து மூன்று பேரையும் ராஜபாளையம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

