ADDED : செப் 27, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் நடத்தையில் சந்தேகப்பட்டு காஸ் சிலிண்டரால் மனைவியை அடித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருத்தங்கல் பராசக்தி காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் 46, கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தா 36. நடத்தையில் சந்தேகப்பட்ட மகேஸ்வரன் 2019 ஏப்.12ல் காஸ் சிலிண்டரால் மனைவி சாந்தாவின் தலையில் அடித்துக் கொலை செய்தார்.
திருத்தங்கல் போலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மகேஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.