/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கை, கால் செயலிழந்த கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்
/
கை, கால் செயலிழந்த கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்
கை, கால் செயலிழந்த கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்
கை, கால் செயலிழந்த கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்
ADDED : ஜன 29, 2025 01:28 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் கை, கால் செயலிழந்த கணவர் சந்தன மாரியப்பனை கொலை செய்த மனைவி பாண்டிச்செல்விக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் அருகே சேத்துாரை சேர்ந்தவர் சந்தன மாரியப்பன் 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி பாண்டிச்செல்வி 39. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் குடிப்பழக்கத்தின் காரணமாக சந்தன மாரியப்பனுக்கு வலது கை மற்றும் கால் செயல் இழந்து வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. 2022 அக்.16ல் தனது வீட்டில் சந்தன மாரியப்பன் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். மனைவி பாண்டிச்செல்வியே குடும்பத்தகராறில் சந்தனமாரியப்பனை கொலை செய்தது தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் பாண்டிச் செல்விக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.