/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர்களை பாழாக்கும் காட்டுப்பன்றிகள், மயில்கள்
/
பயிர்களை பாழாக்கும் காட்டுப்பன்றிகள், மயில்கள்
ADDED : அக் 19, 2025 09:34 PM
திருச்சுழி: திருச்சிழி சுற்று கிராமங் களில் விளைந்த பயிர்களை இரவில் காட்டுப் பன்றிகளும், பகல் நேரங் களில் மயில்கள், முயல்கள், பாழாக்குவதால் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் அல்லல் படுகின்றனர்.
திருச்சுழி அருகே ஆலடி பட்டி, கரிசல்குளம், மீனாட்சிபுரம், கல்லூரணி, ரெட்டியபட்டி, கத்தாளம்பட்டி, கல்யாணசுந்தரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி, சோளம் பயிர்களை விதைத்து உள்ளனர்.
முன்பு, மக்காச்சோளம் கதிர்கள் வரும் பருவத்தில் இதில் வரும் வாசனையால் ஈர்க்கப்பட்டு இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் கதிர்களை கடித்துத் தின்று சாறுகளை உறிஞ்சும். தற்போது, பன்றிகள் விவசாய நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள விதைகளை பெயர்த்து எடுத்து தின்று விடுகின்றன. இதனால் விதைகள் பாழாவதுடன், பாத்திகளும் சேதம் அடைந்து விடுகின்றன.
இதேபோன்று பகல் நேரங்களில் மயில்கள், முயல்கள், எலிகள் விதைக்கப்பட்டுள்ள விதைகளை தோண்டி எடுத்து உண்கின்றன. இரவு நேர காவல் இருந்தும் பன்றிகளை விரட்ட முடியவில்லை. பகலில் காவல் இருந்தும் பயனில்லை. இதனால் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆலடிபட்டி, ரெட்டியபட்டி விவசாயிகள் கூறியதாவது:
இன்றைய சூழலில் விவசாயம் செய்வது சவாலாக உள்ளது. 24 மணி நேரமும் பயிர்களை பாதுகாக்க நாங்கள் காவல் இருக்க வேண்டியுள்ளது. இருப்பினும் காட்டுப் பன்றிகள் இரவிலும் பகல் நேரத்தில் மயில்கள், எலிகள் பயிர்களை பாழாக்கி விடுகின்றன. இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்ற எங் களுக்கு தெரியவில்லை.
கண்மாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழித்தால் காட்டுப்பன்றிகள், மான்கள் காடுகளுக்குள் சென்று விடும். இவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும். அரசுதான் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.