/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருத்தி விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம்
/
பருத்தி விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம்
ADDED : அக் 19, 2025 09:34 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: தினமலர் செய்தி எதி ரொலியாக பருத்தி சாகுபடி சிரமங்கள், பஞ்சாலை நிறு வனங்கள் சந்திக்கும் சவால்கள், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி அதி கரிப்பது குறித்து விவசாயிகள், பஞ்சாலை உரிமையாளர்கள், வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்ற கலந்தரை யாடல் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.
மாவட்டத்தில் பருத்தி சாகுபடி ஆண்டுக்காண்டு குறைந்து பஞ்சாலைத் தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருவதாக கடந்த வாரம் தினமலரில் செய்தி வெளியாகியிருந்தது.
இதனை அடுத்து பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கும், பஞ்சாலை உரிமையாளர்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து பஞ்சாலை தொழிலை பாதுகாக்கும் வகையில் பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா ஏற்பாட்டில் நடந்தது.
இதில் இந்திய பருத்தி கழக பொது மேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், ராஜபாளையத்தில் ஒரு பருத்தி கொள்முதல் நிலையம் ஆரம்பிக்க உள்ளதாகவும், இதற்கு குறைந்தது 3 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட வேண்டும், என்றார்.
விஞ்ஞானிகள் ஆசா ராணி, சங்கரநாராயணன், உஷாராணி, வளர்மதி பேசினர்.