/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்: --விவசாயிகள் வேதனை
/
நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்: --விவசாயிகள் வேதனை
நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்: --விவசாயிகள் வேதனை
நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்: --விவசாயிகள் வேதனை
ADDED : டிச 15, 2024 05:59 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே நெற்பயிரில் காட்டு பன்றிகள் புகுந்ததால் 8 ஏக்கருக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது.
சேத்துார் சிலம்பநேரி கண்மாய் ஒட்டிய நெற்பயிரில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக நுழைந்து கதிர்களை கடித்தும், சாய்த்து சேதம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் கண்மாய் ஒட்டிய சேத்துாரை சேர்ந்த ராமராஜ், சரவணன், பாலு, ஆதி மூலம், சுந்தர் மற்றும் சிலரின் சுமார் 8 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. 40 நாட்களுக்குள் அறுவடை எட்ட உள்ள நிலையில் தற்போதைய சேதத்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சரவணன்: குத்தகைக்கு பாடுபட்டு ஏக்கர் ரூ 30 ஆயிரம் வரை செலவு செய்து பாடுபட்டுள்ளேன். பால் கதிர்கள் தற்போது வெளிவந்துள்ளன. அருகிலுள்ள பிராவடி, சிலம்பநேரி கண்மாய் புதர்களல் பதுங்கி காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் நுழைந்து கதிர்களை கடித்தும், நீர் தவளை கோரை கிழங்குகளை தேடி வரப்பினை சேதப்படுத்தி உள்ளது. இதனால் பயிர்கள் ஆங்காங்கு மண்ணில் சாய்ந்து பயனின்றி போகிறது.
வனச்சரகர் கார்த்திகேயன்: வனப்பகுதிக்கு 5 கி.மீ., தொலைவில் விவசாய நிலம் உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு மழை நின்றதும் பன்றிகளை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துகளை துணியில் நனைத்து விவசாயிகளுக்கு வழங்குவோம். இந்த வாடையால் பன்றிகள் நுழைவது கட்டுப்படும்.