/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டாற்றின் நாணல்களில் காட்டுப்பன்றிகள்;விவசாயிகள் புலம்பல்
/
குண்டாற்றின் நாணல்களில் காட்டுப்பன்றிகள்;விவசாயிகள் புலம்பல்
குண்டாற்றின் நாணல்களில் காட்டுப்பன்றிகள்;விவசாயிகள் புலம்பல்
குண்டாற்றின் நாணல்களில் காட்டுப்பன்றிகள்;விவசாயிகள் புலம்பல்
ADDED : ஜன 02, 2025 11:58 PM
காரியாபட்டி; குண்டாற்றில் வளர்ந்துஉள்ள நாணல்களுக்குள் காட்டுப்பன்றிகள் தங்குகின்றன. விவசாயத்தை அழித்து வருவதால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அருகே குண்டாறு ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை, மதுரை மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் குண்டாற்றில் வரும். வையம்பட்டி, பிசிண்டி, கே. கரிசல்குளம் பகுதியில் ஆற்றில் கிடந்த மணல்கள் சுரண்டப்பட்டதால் பாறை கற்களாக தெரிகின்றன.
மணல்கள் இருக்கும் போது மற்ற செடிகள் முளைக்காது. கட்டாந்தரையாக இருப்பதால் சீமைக் கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்துள்ளன. மழை நீர் வரும்போது இடையூறு ஏற்படுத்துவதுடன் உருண்டு ஓடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
மணல் எடுத்த பள்ளங்கள் உள்ளதால் மழை நீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல் உள்ளது. இந்நிலையில் நாணல்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் ஆற்றில் புதர் மண்டி காணப்படுகிறது. காட்டுப் பன்றிகள் நாணல்களுக்குள் தங்கி, அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகள் விவசாயம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். எனவே நாணல்களை அகற்ற வேண்டும்.

