/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றி புகுந்து சேதம்
/
மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றி புகுந்து சேதம்
மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றி புகுந்து சேதம்
மக்காச்சோள பயிர்களில் காட்டுப்பன்றி புகுந்து சேதம்
ADDED : நவ 28, 2024 04:55 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வடகரை, சுற்றுவட்டாரத்தில் உள்ள 6 கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த மக்கா சோளத்தை காட்டுபன்றிகள் சேதப்படுத்தி வருவதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே வடகரை, தென்கரை, லட்சுமியாபுரம், சிவலிங்காபுரம் கிராமங்களை சுற்றி நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
அதிக தண்ணீர் ,பராமரிப்பு தேவை படாத 3 மாத பயிரான மக்காச்சோள பயிர்களை நடவு செய்து இரண்டு மாதங்களாக பராமரிப்பு செய்து விளைச்சல் கண்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி உள்ள காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் வரை செலவழித்து பாடுபட்டு வளர்த்த பயிர்கள் காட்டு பன்றிகளால் சேதமாகி வருவதால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி மாரிமுத்து: கடன் வாங்கி பராமரித்து வளர்த்த பயிர்கள் சேதமாவதால் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றோம். காட்டு பன்றிகளை பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதுவரை சேதம் ஆகும் பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.