/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையின் சித்தா உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுமா
/
விருதுநகர் அரசு மருத்துவமனையின் சித்தா உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுமா
விருதுநகர் அரசு மருத்துவமனையின் சித்தா உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுமா
விருதுநகர் அரசு மருத்துவமனையின் சித்தா உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுமா
ADDED : நவ 12, 2024 04:32 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் சித்தா உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கான மூன்று வேளை உணவையும் உறவினர்கள் கொண்டு வந்து கொடுக்கும் நிலை உள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு ஆண்கள், பெண்கள் என வெளி நோயாளிகள் 130 பேர் தினமும் வந்து செல்கின்றனர். தற்போது 10 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதில் ஆண்களுக்கு 6, பெண்களுக்கு 4 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு வாதநோய், தோல்நோய்கள், குழந்தையின்மை, மது, புகை மறுவாழ்வு சிகிச்சை, மாதவிலக்கு, மூட்டுவலி, முடக்குவாதம் சிகிச்சை, சர்க்கரை சத்து, ரத்த கொதிப்பு, கர்ப்பப்பை புற்றுநோய் உள்பட பல பிரச்னைகளுக்கு சித்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெளிநோயாளிகளுக்கு தேவைப்பட்டால் வர்ம சிகிச்சை, தொக்கணம், எண்ணெய் குளியல், மெழுகு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை விட தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஆனால் சித்தா உள்நோயாளிகளுக்கு ஒரு வேளை உணவு கூட வழங்கப்படுவதில்லை. இதனால் உள்நோயாளிகளுக்கு தேவையான மூன்று வேளை உணவையும் உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்கள் வீடு, உணவகங்களில் இருந்து வாங்கி கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
சித்தா உள்நோயாளிகள் பிரிவு முறையாக சுத்தம் செய்யப்படாததால் முதியவர்கள் சுவாசப்பிரச்னைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சித்தா உள்நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.