sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

'மதி எக்ஸ்பிரஸ்' அங்காடிகள் ஆய்வு செய்யப்படுமா

/

'மதி எக்ஸ்பிரஸ்' அங்காடிகள் ஆய்வு செய்யப்படுமா

'மதி எக்ஸ்பிரஸ்' அங்காடிகள் ஆய்வு செய்யப்படுமா

'மதி எக்ஸ்பிரஸ்' அங்காடிகள் ஆய்வு செய்யப்படுமா


ADDED : மே 04, 2025 05:07 AM

Google News

ADDED : மே 04, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 'மதி எக்ஸ்பிரஸ்' எனும் வாகன அங்காடிகளில் நிர்ணயித்த பொருட்கள் தான் விற்கப்படுகிறதா என்றும், அவை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் மாவட்ட மகளிர் திட்டம் முன்வர வேண்டும்.

'மதி எக்ஸ்பிரஸ்' என்பது மகளிர் சுய உதவி குழுக்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு வாகன அங்காடியாகும்.

இந்த அங்காடி மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என அரசு கூறுகிறது. இந்த பேட்டரி வாகன அங்காடிகளை வழங்குவது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

இந்த வாகன அங்காடிகளில் மகளிர் குழுக்களின் தயாரிப்புகளை காட்டிலும், பிற தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் 3 வாகன அங்காடிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இவர்கள் மாற்றுத்திறனாளியாகவோ, நலிவடைந்தவராகவோ இருக்கும் பட்சத்தில் அதில் தேவையான வசதிகளும் வாகனங்களில் செய்து தரப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது நல்ல திட்டம் என்பதாலும், மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் அதிகம் இருப்பதாலும், அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு இது தேவையாக உள்ளது. இதை அதிகப்படுத்த வேண்டும். முறைப்படி பயனடைவதையும் உறுதி செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us