/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.10 மஞ்சப்பை வென்டிங் மிஷின்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படுமா
/
ரூ.10 மஞ்சப்பை வென்டிங் மிஷின்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படுமா
ரூ.10 மஞ்சப்பை வென்டிங் மிஷின்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படுமா
ரூ.10 மஞ்சப்பை வென்டிங் மிஷின்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படுமா
ADDED : ஆக 08, 2025 02:22 AM
விருதுநகர்:ரூ.10க்கு மஞ்சப்பை வழங்கும் வென்டிங் மிஷின் சென்னை தலைமை செயலகத்தில் வைத்ததை போல மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 2023ல் தி.மு.க., அரசால் 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டம் துவங்கப்பட்டது. 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தனர்.
துவக்கத்தில் கெடுபிடியாக இருந்தனர். ஆனால் தொடர் கண்காணிப்பின்றி மீண்டும் கட்டுக்கடங்காதளவு பிளாஸ்டிக் பயன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் துணிப்பைகளை பொது இடங்களில் அரசு அலுவலர்கள் இலவசமாக வழங்கினர். குறிப்பாக இந்த பணியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மட்டுமே செய்தனர்.
பிறகு வேளாண், தோட்டக்கலை, சுகாதாரம், போக்குவரத்துத்துறை என அனைத்துதுறைகளின் நிகழ்வுகளிலும் வழங்கப்பட்டது. பின்னர் இத்திட்டமும் முடங்கியது. அதேவேளையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் நான்கு வழிச்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் ராட்சத பில்போர்டுகளை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மீண்டும் மஞ்சப்பை வென்டிங் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 போட்டால் ஒரு மஞ்சள் பையை இந்த மிஷின் வழங்கும். இந்த ஐடியா பலரால் பாராட்டப்பட்டது. இதை தற்போது மாவட்டங்கள் தோறும் விரிவுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
வெளிநாடுகளில் இதுபோன்ற வென்டிங் மிஷின்களை தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அந்நாட்டு அரசுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளன. இதே போன்றும் செய்யலாம்.
கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட்கள் என மக்கள் அதிகம் வந்து செல்லுமிடங்களிலும் இந்த மிஷினை நிறுவினால் பலர் பயன்படுத்துவர். அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.