/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்குமா?
/
குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்குமா?
ADDED : பிப் 05, 2025 02:11 AM
விருதுநகர்:'பட்டாசு விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்' என்ற முதல்வரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு நடந்த 12 வெடி விபத்துகளில் 47 பேர் பலியாகி உள்ளனர்; 27 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பட்டாசு ஆலைகளில் பணிபுரியும், போர்மேன், மேலாளர், ரசாயன கலவை பணிகளில் ஈடுபடுவோருக்கு சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு பயிற்சி மையத்தின் சார்பாக பயிற்சி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவ., 10ல் விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின், விபத்தில் இறந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுதையும் அரசே ஏற்கும் என அறிவித்தார்.
ஆனால், அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. விரைந்து வெளியிட தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.