/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பா
/
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பா
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பா
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பா
ADDED : ஏப் 03, 2025 05:35 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியுடன் அதனை சுற்றியுள்ள கோட்டைப்பட்டி, திருவண்ணாமலை, அத்திகுளம் செங்குளம், அயன்நாச்சியார் கோவில், படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சிகளின் சில பகுதிகள் இணைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி எல்லைப் பகுதியை சுற்றி கோட்டைப்பட்டி, திருவண்ணாமலை, அத்திகுளம் செங்குளம், அயன் நாச்சியார்கோவில், படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சிகள் உள்ளன.
இப்பகுதியில் குடியிருப்புகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதனால் நகராட்சி பகுதியும் ஊராட்சி பகுதியும் ஒன்றுக்கொன்று இரண்டற கலந்து வருகிறது. இதனால் நகராட்சியுடன் மேற்கண்ட ஊராட்சிகள் இணையும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்ததில், மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் கோவில் நகரமான ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி பகுதியை சுற்றி உள்ள கிராமங்களிலும் பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தும் விதமாக கிராம பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுஉள்ளது. மற்றபடி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க திட்டமிடவில்லை, என்றனர்.

