/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கம்ப மின்சாதனங்கள் பழுது கவனிக்குமா மின்வாரியம்
/
கம்ப மின்சாதனங்கள் பழுது கவனிக்குமா மின்வாரியம்
ADDED : ஜன 13, 2024 04:49 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் மின்கம்பங்களில் விளக்குகளை ஆன் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பொருத்திய மின் சாதனங்கள் பழுதாகி உள்ளன.விருதுநகர் நகராட்சி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன.
இவற்றில் தெருவிளக்குகளை ஆன் செய்து ஆப் செய்வதற்கான சுவிட்ச் பொருத்தி அலுமினிய பெட்டி போல் அமைத்துள்ள மின் சாதனங்கள் பெரும்பாலானவை பழுதாகி உள்ளன.
இவை குடியிருப்பு பகுதியில் இருப்பதாலும் சிறுவர்கள் கையில் கூட எளிதில் எட்டும் வகையிலும் உள்ளன. அலுமினிய பெட்டிகள் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளன.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் இவை சுவிட்ச்களில் பட்டு விபத்து ஏற்படுத்துகின்றன. இதனால் மின்னழுத்தம் ஏற்பட்டு பல்புகள் பழுதாகும் வாய்ப்புள்ளது
மேலும் பல பகுதிகளில் கொடிகள் சூழ்ந்தும் மின்கம்பங்கள் பாழாகி வருகின்றன. ஆகவே நகராட்சி பகுதிகளில் மின்சாதனங்கள் பழுதாகி சேதம் அடைந்த நிலையில் உள்ளதை மின்வாரியம், நகராட்சியினர் சரி செய்ய வேண்டும். தேவையற்ற வகையில் திறந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின்சாதனங்களை உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும்.