/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் போடப்பட்ட காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக்கப்படுமா
/
கிடப்பில் போடப்பட்ட காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக்கப்படுமா
கிடப்பில் போடப்பட்ட காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக்கப்படுமா
கிடப்பில் போடப்பட்ட காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக்கப்படுமா
ADDED : நவ 09, 2024 07:49 AM

காரியாபட்டி : தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல், தொழிலாளர்கள் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.
காரியாபட்டியில் தி.மு.க., ஆட்சியில் பஸ் டெப்போ கொண்டு வரப்பட்டது. வாடகை இடத்தில் தற்காலிகமாக துவங்கப்பட்டது. அதற்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து டெப்போ நிரந்தரமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் காரியாபட்டி பஸ் டெப்போ நிரந்தரமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காரியாபட்டியில் டெப்போவை நிரந்தரமாக்கப்படாமல் இருந்து வரகிறது. மழை நேரங்களில் சேரும், சகதியுமாகி பஸ்களை டெப்போக்கள் நிறுத்த முடியவில்லை. தொழிலாளர்கள் போதிய வசதி இன்றி சிரமப்படுகின்றனர்.
டீசல், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்ட பிரச்னைகளால் மற்ற டிப்போக்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள் முட்டுக்கட்டையால் டெப்போ தொடர்ந்து தற்காலிக இடத்தில் செயல்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.
மீண்டும் தி.மு.க., ஆட்சியில் டெப்போ நிரந்தரமாக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரியாபட்டியில் ஏராளமான அரசு புறம்போக்கு இடங்கள் உள்ளன.
இதனை கண்டறிந்து டெப்போ தொடங்குவதற்கு தேவையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.