/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்
/
கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்
கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்
கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் சாட்சி விசாரணை துவக்கம்
ADDED : மார் 18, 2025 01:28 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலி முகவரி சான்று கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நேற்று முதல் துவங்கியது.
2016ல் சிவகாசியை சேர்ந்த கணேஷ் என்பவரின் முகவரி, அடையாள அட்டை சான்றுகள் ஜெராக்சை போலியாக கொடுத்து சிம் கார்டை வாங்கியதாக கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்டுகள் சைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் மீது சிவகாசி டவுன் போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு விருதுநகர் க்யூ பிராஞ்ச் போலீசிற்கு மாற்றப்பட்டது.
இருவரும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் கோவை சிறையில் இருந்த நிலையில் தற்போது ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்நிலையில் 9 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று முதல் சாட்சி விசாரணை துவங்கியது. மாவோயிஸ்டுகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சாட்சிகள் 3 பேரிடம் விசாரணை நடந்தது. விசாரணையை ஏப்.,8க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.