ADDED : ஏப் 24, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும்பொதிகை விரைவு ரயில்(12661) நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்துார் இடையே ஆனையூர் பகுதியில் சென்ற போது ரயிலில் அடிபட்டு பெண் பலியானார் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரணையில் இறந்தது சிவகாசி அருகே ஆனையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சமையல் மனைவி தவசியம்மாள் 46, என்பது தெரிய வந்தது.
பட்டாசு தொழிலாளியான தவசியம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்த தவசியம்மாள் ஆனையூர் பகுதியில் ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

