/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்

ADDED : ஏப் 13, 2025 03:30 AM
விருதுநகர்: விருதுநகரில் பொருட்காட்சி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்.
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கே.வி.எஸ்.பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி நடக்கிறது.
நேற்று முன்தினம் விருதுநகர் பாத்திமா நகர் கவுசல்யா 22, தலைகீழாக சுழலும் ராட்சத ராட்டினத்தில் ஏறினார். ஏர் லாக்' சரியாக பொருத்தாததால் பாதுகாப்பு பெல்ட் கழன்று ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்த போதே நழுவி அந்தரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதால் ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேலாளர் அஜிக்ஸ் குமார், மேற்பார்வையாளர் தேவேந்திரன், ஆப்பரேட்டர் முகேஷ் சிங் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.