ADDED : பிப் 21, 2026 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் இறந்த சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த அமராவதி 55, கண்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் அமராவதி. இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று காலை விருதுநகர் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
ஆறு மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் அமராவதியின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் நேற்று மதியம் தானமாக பெறப்பட்டது.
இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

