/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவமனையில் மாறிய மாத்திரை பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு
/
மருத்துவமனையில் மாறிய மாத்திரை பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு
மருத்துவமனையில் மாறிய மாத்திரை பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு
மருத்துவமனையில் மாறிய மாத்திரை பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு
ADDED : ஆக 06, 2025 12:15 AM
காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மாங்குளத்தைச் சேர்ந்தவர் அழகு ராணி 30. இவருக்கு தைராய்டு பிரச்னை இருந்ததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரையின்படி காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார்.
15 நாட்கள் சாப்பிட்ட பின் அவரது நாக்கு சுருண்டு கடுமையாக பாதிக்கப்பட்டார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தைராய்டு மாத்திரைக்கு பதில் வலிப்பு மாத்திரை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழகுராணி மற்றும் அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.
அழகு ராணி கூறியதாவது: விருதுநகர் சென்று வர முடியாமல் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். 15 நாட்களுக்கு பின் நாக்கு சுருண்டு உடலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு அஜாக்கிரதையாக மாத்திரை வழங்கியவர் மீது மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: இருவர் பணி செய்ய வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவரும் விடுப்பில் சென்ற போது செவிலியர்கள் மாத்திரைகள் வழங்குவர். தைராய்டு மாத்திரையும் வலிப்பு மாத்திரையும் ஏறக்குறைய ஒத்த எழுத்துக்களில் ஆரம்பித்து, கடைசியில் மாறி இருக்கும். அவசரத்தில் மாத்திரையை மாத்தி கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.
இருந்தாலும் இதுகுறித்து விசாரித்து தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக மருந்தாளுநரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடக்காத வகையில் கண்காணிக்கப்படும் என்றார்.