/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்தவரும் பெண்ணின் மகனும் பலி: சாவு 4 ஆக உயர்வு
/
குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்தவரும் பெண்ணின் மகனும் பலி: சாவு 4 ஆக உயர்வு
குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்தவரும் பெண்ணின் மகனும் பலி: சாவு 4 ஆக உயர்வு
குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்தவரும் பெண்ணின் மகனும் பலி: சாவு 4 ஆக உயர்வு
ADDED : டிச 25, 2025 06:22 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மனைவி, அவரது மாமியார் , மனைவியின் இரு குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவத்தில் எரித்த இரண்டாவது கணவரும், பெண்ணின் மகனும் பலியானதை தொடர்ந்து பலி 4 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி முஸ்லிம் ஓடைத் திருவை சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா 40. இவருக்கும் முபாரக் என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து பர்வீன் பானு 18, என்ற மகளும் செய்யது பாரூக் 15, மகனும் உள்ளனர்.
முபாரக் 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்தார். செய்யது அலி பாத்திமா, இரு குழந்தைகள் மாமியார் சிக்கந்தர் பிலீயுடன் 65, ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்யது அலி பாத்திமாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழும் அக்பர் அலிக்கும் 48, இரண்டாவது திருமணம் நடந்தது. இந்நிலையில் விபத்தில் இறந்த முபாரக்கிற்கு இழப்பீட்டுத் தொகை தொகை ரூ. 11 லட்சம் கிடைப்பதாக தகவல் வந்தது.
அக்பர் அலி அந்தப் பணத்தை கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க மறுத்ததால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி, அவரது மாமியார், இரு பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அப்போது அக்பர் அலி மீதும் தீப் பற்றியது. அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் செய்யது அலி பாத்திமா, சிக்கந்தர் பீவி இறந்தனர். நேற்று மதியம் அக்பர் அலியும், இரவில் செய்யது பாரூக்கும் இறந்தனர்.
இதையடுத்து இச்சம்பவத்தில் பலி 4 ஆக உயர்ந்துள்ளது. பர்வீன் பானு 40 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

