/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரியன் ஊருணியில் மரம் வளர்க்கும் பெண்கள்
/
மரியன் ஊருணியில் மரம் வளர்க்கும் பெண்கள்
ADDED : அக் 21, 2024 04:40 AM

சாத்துார் நகரில் வாறுகால் கட்டும் பணி, ரோடு விரிவாக்க பணிகள் காரணமாக நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன.
தடம் பசுமை இயக்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சியால் 10 ஆண்டுகளுக்கு முன் நகரில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நட்டி வளர்த்து வந்தனர்.
சாக்கடை ஊருணியாக இருந்த மரியன் ஊருணி தற்போது பூங்காவாக மாறி நகருக்கு அழகு சேர்ப்பது மக்களுக்கும் பொழுதுபோக்கும் இடமாக மாறி உள்ளது. ஒரு புறம் மரங்கள் வெட்டப்பட்ட போதும் தன்னார்வமிக்க தன்னார்வலர்களால் மரம் கற்கும் பணியை மக்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மரம் பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக உள்ளது. அசுத்தமான கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி மனிதர்களுக்கு மட்டும் விலங்குகள் சுவாசிக்கும் ஆக்சிஜனை மரங்கள் வெளியிடுவதால் மரங்களை நேசிக்காதவர்களே இருக்க முடியாது.
அடுத்தடுத்து மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில் சாத்துார் இன்னர் வீல் பெண்கள் அமைப்பு பள்ளி மாணவர்கள் மூலம் நட்டி நகர்ந்த பசுமையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
பள்ளி மாணவர்களை வைத்து ஒரே நாளில் 163 மரக்கன்றுகளை மரியன் ஊருணியில் நட்டு மக்களிடம் மாணவர்களுக்கும் மரம் வளர்ப்பதன் அவசியத்தை விழிப்புணர்வாக ஏற்படுத்தி உள்ளனர். சுத்தமான காற்று மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ அவசியம்.
காற்றும் மழையும் கிடைக்க மரங்கள் அவசியமாகும். வளர்ச்சி பணிகள் நடைபெறும் போது மரங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளும் முன்வர வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிறுவர்கள் முதியவர்கள் நடைபயிற்சி செய்யவும் விளையாடவும் இங்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.ஆனால் கண்களுக்கு விருந்தாக பசுமையான மரங்கள் பூச்செடிகள் இல்லாத நிலை இருந்தது. தடம் பசுமை இயக்கம் மரம் வளர்ப்பில் ஈடுபட்டது போன்று பெண்கள் நாங்கள் இணைந்து இங்கு மரங்கள் நட முடிவு செய்து 163 மரக்கன்றுகள் பூச்செடிகள் மாணவர்களைக் கொண்டு நட்டி பராமரித்து வருகிறோம் இந்த பணி தொடரும்.
- நித்யா, செயலாளர் இன்னர்வீல் பெண்கள் அமைப்பு, சாத்துார்.
மரியன் ஊருணியில் மரங்கள் இல்லாததால் நடை பயிற்சி செய்வோர் இளைப்பாற நிழலின்றி தவிக்கும் நிலை உள்ளது. தற்போது பருவமழை பெய்ய துவங்கி உள்ளதால் இந்த சமயத்தில் மரக்கன்று நட்டினால் வெயில் காலத்தில் அவை வளர்ந்து மக்களுக்கு நிழல் தரும் என எங்கள் அமைப்பில் முடிவு செய்து வளர்ந்த மரக்கன்றுகள் பூச்செடிகள் தெரிவித்து மாணவர்கள் மூலம் நட்டு அவர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம். இயற்கையாக மரங்கள் தரும் குளிர்ச்சியான காற்றை எந்த ஏசியும் தந்து விடாது. மரம் ஒரு இயற்கை குளிரூட்டி.
- சுபாலட்சுமி, தலைவர் இன்னர்வீல் பெண்கள் அமைப்பு, சாத்துார்.