ADDED : ஜூலை 31, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் மகளிர் மேம்பாட்டு மையம், ராஜ பாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் அறிவழகி தலைமை வகித்தனர். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க கவர்னர் காந்தி கிருஷ்ணன், மகளிர் மைய தலைவர் கல்பனா வரவேற்றார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியை ஜெயந்தா ஸ்ரீ மகளிர் முன்னேற்றம், வாழ்வில் தடைகளை எதிர்கொள்ளும் விதம் பற்றி பேசினார்.
ரோட்டரி நிர்வாகிகள் கார்த்திகேயன், செல்வ அழகு, விஜயகுமாரி நன்றி கூறினர்.
ஏற்பாடுகளை பேராசிரியைகள் கீதா, ஜெனிதா செய்திருந்தனர்.