/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் பணியாளர்கள் 140 பேர் நீக்கம்; ஒப்பந்தம் மாறியதால் பணிகள் பாதி்ப்பு
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் பணியாளர்கள் 140 பேர் நீக்கம்; ஒப்பந்தம் மாறியதால் பணிகள் பாதி்ப்பு
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் பணியாளர்கள் 140 பேர் நீக்கம்; ஒப்பந்தம் மாறியதால் பணிகள் பாதி்ப்பு
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனியார் பணியாளர்கள் 140 பேர் நீக்கம்; ஒப்பந்தம் மாறியதால் பணிகள் பாதி்ப்பு
ADDED : மே 19, 2025 05:40 AM
விருதுநகர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பணிபுரிந்த தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 140 பேர் நீக்கப்பட்டனர். ஒப்பந்தம் மாறியதால் ஏற்பட்ட குளறுபடியால் மருத்துவமனையின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022ம் ஆண்டு ஜன 12ல் திறக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவாவதால் மக்கள் பலரும் அரசு மருத்துவனைக்கு வருகின்றனர். இதனால் உள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மருத்துவமனை திறக்கப்பட்ட போது 645 படுக்கைகள் மட்டுமே இருந்தது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப தற்போது 1200 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு துாய்மை பணியை செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வெளி நோயாளிகள் பிரிவிலும், வார்டுகளிலும் பணி செய்தனர்.
இதில் வார்டுகளில் பணிபுரிபவர்கள் அறுவை சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளை இடமாற்றம் செய்வது, அவர்களுக்கு இனிமோ கொடுப்பது, ரத்த மாதிரிகளை கொண்டுச் சென்று பரிசோதனைக்கு கொடுப்பது, அதன் முடிவுகளை வாங்கி வருவது என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் டெக்னீசியன், உதவியாளர், பிளம்பிங், எலக்ட்ரீசியன், லிப்ட் ஆப்ரேட்டர் உள்பட பல்வேறு பணியிடங்கள் அரசாங்கத்தால் நிரப்பப்படவில்லை. இப்பணியிடங்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால் மருத்துவமனையின் பல்வேறு பணிகள் தடையின்றி நடந்தது.
இந்நிலையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து புதிதாக மற்றொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து தனியார் ஒப்பந்தத்தில் இருந்த 400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 140 பேர் முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மருத்துவமனையின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டு, வெளி நோயாளிகள் பிரிவு, வார்டுகளில் பணிபுரிய போதிய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களை அரசு நிரப்பாததால் ஒப்பந்த பணியாளர்களை வைத்து சமாளித்து வந்த நிலையில் அவர்களையும் வேலையை விட்டு நிறுத்தியதால் மருத்துவமனையின் அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: இப்பிரச்னை குறித்து சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்படும். மருத்துவமனையின் அன்றாட பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.