தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்

 புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்

 புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி துவக்கம்


ADDED : ஜன 21, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ள னர்.

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வன உயிரின அமைப்பு சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு நடக்கும்.

அதன்படி இந்த ஆண்டும் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை ஆகிய 5 காப்பகங்களில் கணக்கெடுக்கும் பணிதுவங்கியுள்ளது.

கடந்த வாரம் வரை வனத்துறையினர் நேரடி பார்வையின் மூலம் புலி களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த னர்.

தற்போது 4 வன சரகங்களிலும் 150 க்கு மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.

துணை இயக்குனர் முருகன் தலைமையில் வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அடர் வனத்தின் உட் பகுதியில் பொருத்தப்படும் இந்த கேமராக்கள் 45 நாட்கள் புலிகள் நடமாட்டத்தை பதிவு செய்யும்.

பின்னர் சேகரிக்கப்பட்ட தரவுகள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, புலிகள் எண்ணிக்கை தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us