/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் மைக் செட் ஊழியர் கொலையில் தொழிலாளி கைது
/
ஸ்ரீவி.,யில் மைக் செட் ஊழியர் கொலையில் தொழிலாளி கைது
ஸ்ரீவி.,யில் மைக் செட் ஊழியர் கொலையில் தொழிலாளி கைது
ஸ்ரீவி.,யில் மைக் செட் ஊழியர் கொலையில் தொழிலாளி கைது
ADDED : டிச 04, 2024 12:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் மைக் செட் ஊழியர் பிரகாஷ் 46, கொலை செய்து சாக்கு மூடையில் வைத்து தெருவில் வீசிய வழக்கில் கூலித்தொழிலாளி வின்சென்ட் 54, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் சந்தப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் . மைக் செட் ஊழியர்.
இவர் நவ. 28 அதிகாலை கொலை செய்யப்பட்டு உடல் சாக்கு மூடையில் கட்டப்பட்டு, தோமா என்பவரது வீட்டிற்கு அருகில் வீசி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி. ராஜா, தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில் அதே தெருவை சேர்ந்த வின்சென்டிடம் விசாரித்ததில் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்து பிரகாஷ் அவதுாறாக பேசிய கோபத்தில், பிரகாைஷ மண்வெட்டி கைப்பிடியால் அடித்து கொலை செய்து உடலை சாக்கில் கட்டி சம்பவ இடத்தில் போட்டது
தெரியவந்தது. இதனையடுத்து வின்சென்ட்டை கைது செய்து அவரது வீட்டில் இருந்த ரூ. 12 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.