/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
/
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ADDED : ஆக 31, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் மகேந்திரராஜா 47. 15 வயதில் மகள் உள்ளார்.
மன்னார் கோட்டை ரோட்டில் சரவணன் என்பவரின் கிளாம்ப் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு கம்பெனியில் கிளாம்ப் தயாரிப்பதற்காக இயந்திரம் மூலம் தகரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.
சாத்துார் அரசு மருத்துவமனையில் இரவு 11:00 மணிக்கு பலியானார். அம்மா பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.